திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதி சேர்ந்தவர் ஷேக்தாவூத் இவரது மனைவி பாத்திமா. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் லாரி ஒன்று வாங்கி மாதம் தோறும் அதற்கு பணம் கட்டி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாகனத்தின் லைசென்ஸ் , வாகனத்தின் ஆர்சி புத்தகம் தொலைந்து விட்டதால் கடந்த மூன்று மாதமாக இதற்கு பணம் கட்டவில்லை. இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் ஆட்கள் தொடர்ந்து பணத்தை கட்டும்படி வற்புறுத்தி வந்தனர். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் எனது லாரியை கொண்டு சென்று ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன்.

ஆனால் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் என்னுடைய அனுமதி இல்லாமல் வண்டியை அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டனர். என் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த வண்டியை என்னுடைய அனுமதி இல்லாமல் ஒப்படைத்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து என்னை மிரட்டி வருகின்றனர். எனவே உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு காவல்துறையினரை கண்டித்து தீக்குளிக்க முயன்றனர்.

 இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு மாவட்ட ஆட்சியாளர் உள்ளே சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திடீர் தீக்குளிப்பு சம்பவத்தால் மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு சுமார் 30 நிமிடத்திற்கு மேல் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *