அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் இன்று காலை காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அதிமுக வேட்பாளர் ராஜசேகரனின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் காந்தி மார்க்கெட் பகுதியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
