அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சியில் இன்று திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்த வெளி வாகனத்தின் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் ராஜசேகரன் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு வாக்காள பெருமக்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார். இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
