திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும் மேற்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான கே என் நேரு அவர்கள் 52 வது வார்டுக்கு ட்பட்ட மார்சிங் பேட்டை போலீஸ் காலனி பென்சனர்தெரு மேலப்புதூர் தரங்கை வாசல் பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்கசென்றபோது, அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் 6 வயது பையன் உற்சாகத்தில் அமைச்சரின் வாகனத்தில் ஏறி எங்கள் ஓட்டு உதயசூரியனுக்கு என்று ஆரவாரத்துடன், மகிழ்ச்சியோடு கூறினான் அருகில் மாநகர செயலாளர் மேயருமான மு அன்பழகன் மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், விஜயா ஜெயராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் காஜாமலை விஜய் மார்சிங் பேட்டை செல்வம், உட்பட பலர் உடன் சென்றனர்
