திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் ஆயுத கண்காட்சியை பார்வையிட வந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் திருச்சி அசால்ட் ரைபிள்,டிரைகா துப்பாக்கிகளை தமிழக காவல்துறைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகமும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் கோரிக்கை வைத்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு நாட்டின் 75வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 75 இடங்களில் பாதுகாப்பு ஆயுத தயாரிப்புகளை உள்ளூர் பொதுமக்கள் கண்காட்சிக்கு கடந்த 13ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடந்தது. இதனை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

 அதன்படி கான்பூரில் உள்ள மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் கருவிகள் இந்தியா லிமிடெட் டின் (எ டபுள்யூ இ ஐ எல்) ஒரு அங்கமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள ஜே எஸ் சி கலையரங்கத்தில் நவீன பாதுகாப்பு ஆயுதங்கள், கருவிகள் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பழங்கால ஆயுதங்கள்முதல் நவீன கால ஆயுதங்கள் வரை இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளபாதுகாப்பு ஆயுதங்கள், கருவிகளை பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் உட்பட அனைத்து பொதுமக்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்டுகளித்தனர். நிறைவு நாளான நேற்று கண்காட்சியில் காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.

 இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கண்காட்சியை பார்வையிட்டார். அவருக்கு திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைபொது மேலாளர் ராஜீவ் ஜெயின் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த துப்பாக்கி ஆயுதங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறியதோடு துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் அசால்ட் ரைபில் மற்றும் துப்பாக்கிகளை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டி தொழிற்சங்கத்தினருடன் இணைந்து கோரிக்கை வைத்தார் தொழிற்சங்கத்தினர் அமைச்சரிடம் கூறுகையில் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்கள் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் திருச்சி அசால்ட் ரையில் துப்பாக்கிகளை காவல்துறைக்கு கொள்முதல் செய்வதாகவும், ஆனால் தமிழக அரசு தமிழக காவல்துறைக்கு இதுவரைதிருச்சி அசால்ட் ரைபில் துப்பாக்கிகளை கொள்முதல் செய்யவில்லை எனவே திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் திருச்சி அசால்ட் ரைபில் துப்பாக்கிகளை காவல்துறைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

 அதற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில் இதுகுறித்து கடிதம் கொடுங்கள் தமிழக முதல்வரிடம் பேசி காவல்துறைக்கு திருச்சி அசால்ட் ரைபிள் துப்பாக்கிகளை கொள்முதல் செய்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துசென்றார்.இந்த விழாவில் உதவி பொது மேலாளர் ஏ.கே.சிங் இணை பொது மேலாளர் குணசேகர் மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை தொமுச தொழிற் சங்க பொது செயலாளர் கண்ணன், பி எம் எஸ் தொழிற்சங்க செயலாளர் அருள் சேவியர், பணிக்குழு உறுப்பினர் வடிவேல், காட்டூர் பகுதி திமுக செயலாளர் நீலமேகம், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மன் சண்முகம்,கும்பகுடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கங்காதரன்,திருச்சி தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுதாகர்,கும்பக்குடி சங்கர் உட்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் எச் இபி எப்(எச் ஏபிபி) நிறுவனத்தில் தொமுச தொழிற்சங்க தொடங்குவது குறித்து ஏ இ பிஎப் திமுக ஜான் கென்னடி உள்ளிட்ட நிர்வாகிகள் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் கலந்து ஆலோசனை செய்தனர்.கடந்த ஒரு வாரமாக நடந்த ஆயுத கண்காட்சியை திருச்சி புதுக்கோட்டை அரியலூர், பெரம்பலூர்,திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிமாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கண்டு களித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்