திருச்சி பொன்நகர் செல்வ நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 30) இவர் திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8- ந்தேதி தன்னுடைய உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றுள்ளார். மீண்டும் உறவினர் வீட்டு நிகழ்ச்சியை முடித்துவிட்டு பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு இன்று காலை வந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே நுழைய முயன்றபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் உள்ள துணிகள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தன. அதனைத் தொடர்ந்து பீரோவில் உள்ள 13 பவுன் தங்க நகை, லேப்டாப், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

பின்னர் லெட்சுமணன் உடனடியாக திருச்சி செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் உதவி ஆணையர் தங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் ஆள் இல்லாததை அறிந்து கொள்வதற்காக பூட்டியிருக்கும் வீட்டு கேட்டுகளில் ஸ்டிக்கர் போன்று ஒரு வடிவத்தை ஓட்டிச் செல்கிறார்கள். அந்த ஸ்டிக்கர் கிழிந்து இருந்தால் வீட்டில் ஆள் இருக்கிறது என்று அறிந்து கொள்கிறார்கள். கிளியவில்லை என்றால் வீட்டில் ஆள் இல்லை என்று உணர்கிறார்கள். இதுபோன்று நூதன முறையில் நன்கு வீட்டில் ஆள் இல்லை என்பதை உணர்ந்த பின்னரே வங்கி அதிகாரி வீட்டில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து மோப்ப நாய் பிரிவு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு கட்ட விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் திருச்சி பொன்நகர் செல்வ நகர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்