திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் சிங்காரத்தோப்பு பூம்புகார் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தை சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக :- பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். கட்டுமான தொழில் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் சட்டங்களைத் திருத்தி நல வாரியங்களை சீரழிக்கக் கூடாது. கட்டுமான தொழிலாளர்கள் பண பயன்கள் பெறுவதற்கு தொழிலாளர்களின் பங்களிப்பை கட்டாயப்படுத்தும் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும். சேம நலநிதியை கட்டுமான தொழிலாளர்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் இயற்கை மரணத்திற்கு ரூ 2 லட்சம் வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கண்காணிப்பு குழு கூட்டத்தை மாதம் ஒருமுறை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். மழைக்கால நிவாரண உதவியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதில் கட்டுமானசங்க மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், உலகநாதன், எம்.எஸ். சேது, வெள்ளைச்சாமி, முருகன், வெங்கடேசன், குணசேகரன், கல்யாணி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *