திருச்சி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை உள்ளிட்டவற்றை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது முதல் கட்டமாக30,000 முகக் கவசங்களை கொடுத்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் எம்.பி.தற்போது படுக்கை வசதி இல்லை என்று சொல்ல முடியாத அளவிற்கு அதிகமான இடங்களில் சிகிச்சை பெறுவதற்கான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு தடுப்புப் பணிகளை மிக சிறப்பாக செய்து வருகிறது.மத்திய அரசானது இந்தியா முழுவதும் சுமார் 50 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது அதில் சென்னையில் ஒன்று நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.ஆனால், என்னுடைய சார்பில் திருச்சி மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனையிலும் பொன்மலை ரயில்வே பணிமனையில் அருகிலும் தற்போது செயல்பாட்டில் இல்லாமல் கிடக்கும் பெல் நிறுவனத்திலும் இந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நிறுவினால் மாவட்டத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் மாவட்டங்களுக்கும் இது பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும் என மத்திய அமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன்.நகரப் பகுதிகளில் அதிகமான தொற்று இருந்து வந்த நிலையில் தற்போது கிராமப்புறங்களிலும் அதிக அளவில் நோய்த்தொற்று ஏற்பட ஆரம்பித்துள்ளது எனவே தமிழகம் முழுவதும் களப்பணியாளர்களை வைத்து வீடு வீடாக சென்று அவர்களுக்கு நோய் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்று கோரிக்கையை தமிழக முதலமைச்சருக்கு முன்வைக்கிறேன்.மேலும் நான் சென்று பார்க்கக் கூடிய இடங்களிலெல்லாம் மருத்துவர்கள், செவிலியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனா. அதன் காரணமாக சிகிச்சை அளிப்பதற்குமருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, அவற்றை ஈடு செய்யும் வகையில் தொடர்ந்து மருத்துவர்களும் செவிலியர்களும் பணியமர்த்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மருத்துவர்களும் செவிலியர்களும் முறையான சிகிச்சையை கொடுத்து அவர்களை மீண்டும் பணி செய்ய விரும்புவோர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பேரறிவாளன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 30நாட்கள் பரோலில் வெளியே சென்றிருக்கிறார்.அவர்கள் விடுதலை முழுமையாக கிடைக்குமா என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எம்பி திருநாவுக்கரசர் உடல்நிலை சரியில்லை என்பதால் அவர் பரோலில் வெளியே அனுப்பப்பட்டது எப்போதும் இருக்கின்ற நடைமுறைதான் அவர் முழுமையான விடுதலை பெற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டியது நீதிமன்றம் மட்டுமே, ஏனென்றால் குற்றவாளிகள் நிரபராதி என்று விடுதலை செய்வதும் தண்டனை கொடுப்பது நீதிமன்றத்திற்கு கூறியது எனவே இதில் முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றம் மட்டுமே என்று தெரிவித்தார்.நீதிமன்றம் எந்த முடிவை எடுத்தாலும் அதை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வோம். இதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *