தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் +2 முடித்த பிள்ளைகளான மாணவர்களுக்கு “தழைக்கட்டும் நமது தலைமுறை -2022” என்ற தலைப்பில் வழிகாட்டும் நிகழ்ச்சி திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநரும், படைத்தலைவருமான முனைவர். சைலேந்திரபாபு கலந்து கொண்டு தலைமையுரையாற்றினார். இதில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார், திருச்சி மாநகர ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் டி.ஜி.பி சைலேந்திர பாபு உரையாற்றுகையில்:-

முதல்வன் திட்டம் மாணவர்களுக்காகவே தமிழக முதல்வர் உருவாக்கி உள்ளார். மாணவர்கள் தான் எடுத்துள்ள பாடக் கல்வியை முழு ஈடுபட்டுடன் கற்க வேண்டும் – வருங்காலத்தில் செயற்கை அறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ) முக்கியத்துவம் பெறும். எனவே மாணவர்கள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும்,நீ இந்த நாட்டுக்கு வருங்கால திட்டத்தை மாணவர்கள் தற்போதே உருவாக்கிக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் திறமை,ஆற்றல்களை படிப்படியாக வளர்த்துக் கொள்ள வேண்டும், தற்போதைய காலகட்டத்தில் அனைத்து துறைகளும் போட்டி நிலவுகிறது.

எனவே போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் விதமாக மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அப்துல் கலாம் என்ற சான்றோர்கள் தங்கள் சொந்த முயற்சிகளால் முன்னேறியவர்கள் அவர்களை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?விழிப்புடன் கவனிக்க வேண்டும் – அரசியல் ரீதியாக, அரசு ரீதியாக சர்வதேச நிறுவனங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறது?

இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பது குறித்து தெரிந்து கொள்ள செய்தித்தாள் படிக்க வேண்டும்,மாணவர்கள் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். கடிதம்,கட்டுரை எழுதுவதாய் இருந்தால் கூட சிறு தவறு இன்றி எழுத வேண்டும் – தமிழ்,ஆங்கில மொழித்திறனுடன் உடல் மொழியும் முக்கியம். இதனை அறிந்து கொண்டால் எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கும். பெற்றோர்கள் தங்கள் உடல்,பொருள், ஆவியை தங்களுடைய குழந்தைகளுக்காக அர்ப்பணித்து உள்ளார்கள். எனவே அவர்களை கைவிட்டு விடாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *