தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 2 மணி வரை பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், குழந்தைகளுக்கான உடை உள்ளிட்டவை அடங்கிய பரிசு பெட்டகம் ஆகியவற்றை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் வழங்கினர்.

தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களின் பிறந்த நாள் இன்று மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த போஸ் செல்வகுமார், எப்.எக்ஸ்,நெப்போலியன் மற்றும் சுமங்கலி சம்பத் ஆகியோர் மாவட்ட செயலாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் குழந்தைகளுக்கான உடைகள் அடங்கிய பரிசு பெட்டகம் உள்ளிட்டவற்றை வழங்கினர். திருச்சி அரசு மருத்துவமனை டீன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த வேதாத்திரி நகர் பாலு , ராயல் சேட்டு, நவசக்தி சண்முகம், பிரேம்குமார், விஜய் ஆனந்த், ஏர்போர்ட் சரவணன் , பகுதி செயலாளர் மோசஸ், வட்ட செயலாளர் கந்தசாமி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்