தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சியினர் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக

தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பில் திருச்சி சங்கிலியாண்டபுரம் அரச மரத்து பஸ் ஸ்டாப் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் பாலக்கரை பகுதி செயலாளர் சந்திரசேகர் ஏற்பாட்டில் மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் அதேபோல் பெண்களுக்கு புடவை மற்றும் சமையல் பொருட்களை மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் வழங்கினார்.

இந்நிகழ்வில் தவெக நிர்வாகிகள் சேஷாத்ரி பாலு, ஜெயராஜ் மற்றும் குமார், பிரகாஷ், மோகன், வார்டு செயலாளர்கள் வேலாயுதம் மாரி, சாந்தி, டிக் ரோஸ், எப்சியால், நிக்சன் சந்தோஷ், லட்சுமி, கிழக்குச் சட்டமன்ற தொகுதி, பாலக்கரை பகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்