தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராஜு மாநில துணைத் தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ,40 வருடங்களாக அஞ்சல் துறையில் பணி செய்து தற்போது வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற தங்களுக்கு உடலில் ஏற்படும் நோய்களுக்கு சரிசெய்வதற்கு கூட கையில் காசு இல்லாத காரணத்தாலும் அன்று 20 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிளில் சென்று வந்ததால் இப்போது மூட்டு தேய்மானம் நோய் ஏற்பட்டு நடக்க கூட முடியாமல் மருத்துவ உதவி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும், எனவே எங்களின் நிலைமையை மத்திய அஞ்சல்துறை பரிசோதனை செய்து எங்களுக்கு குறைந்தபட்ச சேமநல உதவியை மாதம்தோறும் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கையை அரசு ஏற்க மறுக்கும் நிலையில் தமிழக கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் ஜூன் மாதம் கடைசியில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளனர். கூட்டத்திற்கு முசிறி. பெரம்பலூர். துறையூர் ஸ்ரீரங்கம் ஆகிய கோட்டங்களில் பணி செய்து ஓய்வு பெற்ற சுமார் 100க்கும் மேற்பட்ட அஞ்சலக கிராமிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *