இயேசு கிறிஸ்து மரிக்கும் நாள் புனித வெள்ளியாகவும் அவர் உயிர்த்தெழும் நாள் ஈஸ்டர் தினமாகவும் கிறிஸ்தவர்களாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, ஈஸ்டர் தினமான இன்று தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாளையொட்டி ஏசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதையொட்டி வேளாங்கண்ணி பேராலய கலை அரங்கத்தில் நடைபெற்ற ஈஸ்டர் திருநாள் பிரார்த்தனையின் தொடக்கத்தில் பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் ”பாஸ்காஒளி”ஏற்றப்பட்டது.

கலை அரங்க வளாகத்தின் மையப்பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலயஅதிபர் இருதயராஜ் அரங்கத்தின் மேடைக்கு எடுத்து சென்றார். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர்கள் என பல்லாயிரகணக்கானோர் கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி பிராத்தனை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கத்தின் மேற்கூரையில் சிலுவைகொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.

பின்னர் பேராலயஅதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்