தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி , திருச்சி மாவட்டம் , சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பத்தாண்டுகளுக்கு பின்னர் தங்கரதம் தேரோட்டத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

. சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாகும் . பல்லாண்டுகளாக தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்று வந்துள்ள நிலையில் , தங்க ரதம் புதுப்பிக்கப்பட்டு கடந்த 29.08.2010.ல் தங்கரதம் வெள்ளோட்டம் நடைபெற்றது . திருக்கோயில் பிரகார விரிவாக்க திருப்பணி வேலைகள் , ராஜகோபுர திருப்பணிகள் நடைபெற்று வந்த காரணத்தால் 25.02.2011 முதல் தங்கத்தேர் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது , தங்கரத புறப்பாடு நடைபெற்று 10 வருடங்கள் . கடந்த நிலையில் , இத்திருக்கோயிலுக்கு வேண்டுதலுக்காக வரும் இலட்சக்கணக்கான பக்தர்களின் கோரிக்கையினை ஏற்று , உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்கத்தேர் புறப்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது . தங்கத்தேர் புறப்பாடு நடத்துவதற்கு ஏதுவாக , தங்கத்தேரினை தண்ணீர் கொண்டு அழுக்கு நீங்க துடைத்து சுத்தம் செய்யப்பட்டு தங்கரதத்தில் உள்ள அனைத்து மின்விளக்குகள் மின்வயர்கள் , ஜெனரேட்டர் ரூ .3.00 இலட்சம் செலவில் உபயதாரர் மூலம் புதியதாக மாற்றம் செய்யப்பட்டு , அடிப்பகுதியில் உள்ள மரப்பகுதிக்கு வர்ணம் பூசப்பட்டு வெல்டிங்பணி நிறைவு செய்து, பத்தாண்டுகளுக்குப் பின்னர் இன்று தங்கத்தேரை அமைச்சர்கள் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்கப்பட்டது .

தங்கரதம் தினசரி மாலை 7.15 மணிக்கு திருவிழாக் காலங்கள் நீங்கலாக புறப்பாடு நடைபெறும் . தங்கரத புறப்பாட்டிற்குக் கட்டணம் ரூ 1500 / – செலுத்திட வேண்டும் , தங்கரதம் புறப்பாடு உபயதாரர்களுக்கு பிரசாதமாக தேங்காய் , பழம் , வெற்றிலை பாக்கு , பூமாலை , சில்வர் வாளி , லட்டு பரிவட்ட துண்டு ஆகியன வழங்கப்படும் நாள் ஒன்றுக்கு 15 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர் .

முன்னதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் இம்மாவட்டத்தில் திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயில் மற்றும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் ஆகியவற்றினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து , இரண்டு திருக்கோயில்களிலும் ராஜகோபுரம் அமைத்தல் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளுக்கான மேம்பாட்டுப் பணிகள் செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். இந்நிகழ்வுகளின் போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் ,சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன் ,பழனியாண்டி , தியாகராஜன் இணை ஆணையர்கள் செல்வராஜ் , மாரிமுத்து , மாவட்டப் பிரமுகர் வைரமணி , முன்னாள் துணை மேயர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *