Month: June 2022

திருச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் துணிகரம் – இருவரை மடக்கி பிடித்த ஆட்டோ ஓட்டுனர்கள் – 3-பேர் தப்பி ஓட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் காரங்காடு பகுதியை சேர்ந்த குருபரன். இவரது பெரியம்மா மகள் ரேணுகா என்பவருடன் 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்துடன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது இவர்களைப் பின்தொடர்ந்து வந்த 5 பேர் ரேணுகா…

ஒற்றை தலைமையின் அவசியத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் – எடப்பாடிக்கு ஆதரவாக திருச்சியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுக பிளவுப்பட்டு நிற்கிறது. இதனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு…

தமிழக பாஜக இளைஞரணி மாநில செயலாளராக R.M.ஸ்ரீராம் நியமனம்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் ஒப்புதலோடு, மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக பாரதிய ஜனதா இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பா.ஜ.க மாநில இளைஞர் அணி…

சமூக வலை தளத்தில் உலா வரும் திருச்சி அரசு பள்ளி ஆசிரியர்கள் “ச்சீ ச்சீ” புகைப்படம் – பெற்றோர் அதிர்ச்சி.

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு சித்தாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவ மாணவியர் என சுமார் 539 பேர் கல்வி பயின்று வருகின்றனர். அதில் 258 மாணவர்களும், 281 மாணவிகளும் தற்போது கல்வி…

அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் அலுவலகம் அருகே ஒட்டப்பட்ட ஒபிஎஸ் படம் கிழிப்பு – திருச்சியில் பரபரப்பு.

தமிழக அதிமுகவில் தற்போது ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் ஆகியோரின் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்து பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருச்சி மாநகரான ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட், தில்லை நகர்…

சிறப்பு முகாமை இழுத்து மூட வலியுறுத்தி திருச்சியில் நடந்த முற்றுகை போராட்டம்.

திருச்சி மத்திய சிறைச்சாலையில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளில் சேர்ந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதை போல் பல்வேறு வழக்குகளை தொடர்புடைய ஈழத் தமிழர்கள் சுமார் 108 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்…

அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி SRMU துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய மோடி அரசு கடந்த இரண்டு வருடமாக ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கவில்லை. இந்நிலையில் தற்போது அக்னிபாத் திட்டத்தின் கீழ் சுமார் 4 வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இராணுவ வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிக்கை வெளியிட்டு தற்போது அதற்காக இந்தியா முழுவதும் இப்பணிக்கான…

தமிழ் பிராமி எழுத்தில் திருக்குறள் எழுதிய முனைவர். சைவ. சற்குணன் – பாராட்டு தெரிவித்து வரும் தமிழ் அமைப்புகள்.

திருச்சி மாவட்டம் லால்குடி, ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சைவ சற்குணன். இவர் தமிழில் முனைவர் பட்டம், திருக்குறள் புலவர் பட்டம், ஓலைச்சுவடியியல், கல்வெட்டியியல் பட்டயம் சமஸ்கிரதத்தில் பட்டயம் பெற்றுள்ளார். மேலும் பட்டதாரி ஆசிரியர், முதுநிலை தமிழ் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியராக…

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2,082 கிலோ கஞ்சா மூட்டைகள் அழிப்பு.

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்…

திருச்சி மாநக ராட்சிக்கு விரைவில் பி.ஆர்.ஓ நியமனம் – மேயர் அன்பழகன் தகவல்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் காமராஜர் மன்றம் ஏ.எஸ்.டி லூர்துசாமி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் துணை மேயர் திவ்யா ஆகியோர்…

ஒபிஎஸ் பாஜகவில் இணைந்து விடுவார் – முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி.

அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில்:-  1972 ல் அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்தார். அந்த இயக்கத்தை ஜெயலலிதா வலிவோடும் பொலிவோடும் வழிநடத்திச் சென்றார். அதற்குப் பின்னர் எடப்பாடி கே பழனிச்சாமி…

திருச்சியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து – டிரைவர் பலி.

திருச்சி துறையூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து அரசு பேருந்து ஒன்று திருச்சி தீரன் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சர்வீஸ் செய்வதற்காக கொண்டுவரப்பட்டு இன்று மாலை சர்வீஸ் முடிந்து மீண்டும் துறையூர் அரசு…

அக்னிபாத் திட்டம் மூலம் மத்திய அரசு இந்திய ராணுவத்தை பலவீன படுத்துகிறது. – திருச்சியில் திருநாவுக் கரசர் எம்.பி பேட்டி.

மத்திய அரசின் திட்டமான அக்னிபாத் திட்டத்தை கண்டித்து திருச்சி மாநகர மாவட்டம் காங்கிரஸ் சார்பில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் திருச்சி அருணாச்சலம் மன்ற முன்பு மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மோடி…

எடப்பாடிக்கு 75-மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது – திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி.

அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி செய்தியர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- அதிமுக ஆட்சியை கொண்டு வர ஒற்றை தலைமை மீண்டும் தேவை. மேலும் மாவட்ட செயலாளர்களில் 2 தவிர 75 மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒற்றை தலைமை…

பொது மக்களிடம் சிக்கிய வழிப்பறி திருடனுக்கு விழுந்த தர்ம அடி – போலீஸ் வாகனம் சேதம்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி பகுதியில் தென் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது அந்த பகுதியில் இரவு நேரத்தில் தொடர்ந்து வழிப்பறி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மூன்று இளைஞர்கள் அதே பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு அக்கரைப்பட்டி பகுதியில்…