Month: October 2022

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரி ஆற்றில் மனைவி கண்முன்னே கணவன் நீரில் மூழ்கி பலி.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் தீபா (42) இவரது கணவர் மனோகரன்(62) இவர்கள் நேற்று திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். தரிசனம் முடிந்து குளிப்பதற்காக அம்மா மண்டபம் காவிரி ஆற்றின் படித்துறைக்கு வந்துள்ளனர். மனோகரன் குளிப்பதற்காக சென்றபோது…

திருச்சி குளத்தில் கிடந்த சண்டி கேஸ்வரர் சிலை – போலீஸ் விசாரணை.

திருச்சி, மணப்பாறை, பழையபாளையம் கிராமத்தில் உள்ள மருங்கிகுளத்தில் சிலை ஒன்று தலை சேதமடைந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை…

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 90-பவுன் தங்க நகை, பணம் மற்றும் சிசிடிவி ஹாட்டிஸ்க் திருட்டு.

திருச்சி உறையூர் ராமலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கனிமொழி இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது ராமலிங்கா நகர் பகுதியில் கனிமொழி மற்றும் அவரது குழந்தைகள் மட்டும் வசித்து வருகின்றனர்.…

விஜய தசமியை முன்னிட்டு மாநகராட்சி பள்ளி மாணவர் களுக்கு ‘அ’ எழுத கற்றுத்தந்த கவுன்சிலர் முத்து செல்வம் .

விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக இன்று கல்வி கலைகளை கற்கத் தொடங்குகின்றனர். விஜயதசமி தினத்தில் பள்ளிகளில் ப்ரீகேஜி, எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கப்படுவது வழக்கம். ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் LKG,…

திருச்சி குணசீலன் ஸ்ரீ பிரசன்னா வெங்கடாஜலபதி புரட்டாசி தேர் திருவிழா – திருத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே பக்தர்களால் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்வருட விழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம்,…

வெளிநாட்டில் விற்கப்பட்ட புதுக்கோட்டை வாலிபரை மீட்டுக் கொண்டு வந்த எஸ்டிபிஐ நிர்வாகிகள்.

வெளிநாடான கம்போடியாவில் நல்ல வேலை எனக்கூறி வாலிபர் ஒருவரை அழைத்துச் சென்று அங்கு கொடுமைப் படுத்தப்பட்டு 1000 டாலருக்கு விற்கப்பட்டு சிக்கித் தவித்த வரை மாவட்ட நிர்வாகமும் எஸ்டிபிஐ கட்சியினரும் பத்திரமாக மீட்டு சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.…

திருச்சி ராஜம் கிருஷ்ண மூர்த்தி பப்ளிக் பள்ளியில் விஜயதசமி பண்டிகை கோலா கலமாக கொண்டாடப் பட்டது.

திருச்சி பொன் நகர் பகுதியில் உள்ள ராஜம் கிருஷ்ணமூர்த்தி பப்ளிக் பள்ளியில் “அ”என்னும் தமிழ் எழுத்தை விஜயதசமி அன்று எழுதக்கூடிய “வித்யாரம்பம்” நிகழ்வு இன்று நடைபெற்றது. மேலும் கடந்த 9 நாட்களாக நவராத்திரி பண்டிகை முன்னிட்டு பள்ளியில் வைக்கப்பட்ட கொலுவிற்கு சிறப்பு…

உபா சட்டம் மற்றும் என்.ஐ.ஏ வை ரத்து செய்ய வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ பேட்டி.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மேற்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று திருச்சி தென்னூர் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பைஸ் அகமது…

விஜய தசமியை முன்னிட்டு திருச்சி உத்தமர் கோவிலில் “வித்யாரம்பம்” நிகழ்வு – பெற்றோர் குழந்தைகள் பங்கேற்பு.

விஜயதசமியை முன்னிட்டு “அ”என்னும் தமிழ் எழுத்தை விஜயதசமி அன்று எழுதக்கூடிய “வித்யாரம்பம்” நிகழ்வு மும்மூர்த்திகள் ஸ்தலமான திருச்சி உத்தமர் கோயிலில் இன்று நடைபெற்றது. இதில் உத்தமர் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மும்மூர்த்திகளை வணங்கி பெற்றோர் மடியில் குழந்தைகள் அமர்ந்து வாழை…

4-வது நாளாக சுங்கச்சாவடி பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் – ஏஐடியுசி நிர்வாகிகள் ஆதரவு.

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 28 பணியாளர்களை எஸ். கே .எம் நிர்வாகம் ஆட்குறைப்பு நடவடிக்கையாக பணி நீக்கம் செய்ததை திரும்ப பெற வலியுறுத்தி அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடர்ந்து ஒட்டுமொத்த…

விளையாட்டு மைதானத்தில் மாநகராட்சி கட்டிடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு – பணிகள் நிறுத்தம்.

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளது. ஏற்கனவே நான்கு கோட்டமாக செயல்பட்ட வந்த மாநகராட்சி தற்போது 5 மண்டலமாக பிரிக்கப்பட்டு மண்டலத்தில் தேவைப்படும் புதிய அலுவலகங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக திருச்சி கே.கே.நகர், ஏர்போர்ட், எல்.ஐ.சி காலனி…

முதலீட்டாளர் களை ஏமாற்றிய எல்பின் நிறுவனத்திடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத் தரக்கோரி கலெக்டரிடம் மனு.

அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் மாநில இணை செயலாளர் செல்லப்பன் தலைமையில் எல்பின் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- அகில இந்திய மக்கள் நலக்…

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடிய ஓட்டுனர்கள்.

நாடு முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே விவேகானந்தா சுற்றுலா வாகன…

திருச்சி முதியவரிடம் ஆன்லைன் மூலம் 14.5 லட்சம் மோசடி – நைஜீரியா வாலிபர் கைது.

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் காட்டூர் கணேஷ் நகரைச் சேர்ந்த 61 வயதான எம்.முத்து இருளப்பனிடமிருந்து ஆன்லைனில், ரூ.14,50,654 மோசடி செய்யப்பட்டது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், வருமான வரி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் ரீபண்டு கிடைக்கிறது.…

உரிய விதி முறைகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் – கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் திருச்சி துறையூர் பகளவாடி கிராமத்தில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- கிராம சபை…