Month: May 2024

வாவ் வுமன்ஸ் என்டர்டைமென்ட் சார்பாக *பசுமை மெஹந்தி* வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது:-

திருச்சி வாவ் உமன்ஸ்  என்டர்டைமென்ட் சார்பாக பசுமை விழிப்புணர்வு குறித்த மெஹந்தி வேர்ல்ட் ரெக்கார்ட் மற்றும் கிட்ஸ் ராம் வாக் மற்றும் பிசினஸ் எக்ஸலென்ஸ் அவார்ட் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள மொராய்ஸ் சிட்டி கூட்ட அரங்கில்…

திருச்சி மாவட்ட பத்திரிகை யாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சார்பாக கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு:-

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதிலும் குறிப்பாக இன்று முதல் அக்கினி வெயில் தொடங்கியுள்ளது இந்த கோடை வெயிலை சமாளிப்பதற்காக திருச்சி மாவட்டத்தில் அதிமுக திமுக மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் தொழில்…

நாளை முதல் வரும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் *110டிகிரி வரை* அதிகரிக்க வாய்ப்பு!!!

வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். நோயாளிகள் கர்ப்பிணிகள்…

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் 61வது கல்வி நிறுவன தின விழா கொண்டாட்டம்:-.

தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி (என்ஐடி-டி) 61வது கல்வி நிறுவன தினம் மே, 3, 2024 அன்று பார்ன் ஹாலில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திருப்பதியில் அமையப்பெற்றுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் சத்யநாராயணா மற்றும் என்ஐடி திருச்சியின் இயக்குநர் (பொறுப்பு)…

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பயப்பட வேண்டாம் – திருச்சி கதிர் மருத்துவமனை மருத்துவர் கதிரொளி விளக்கம்!

இந்தியாவில் கொரோனா பரவிய காலத்தில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், பாரத் பயோ டெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு மூன்று டோஸ்கள் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி…

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழாவில் நம்பெருமாள் அனுமந்த் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரைத்…

திமுக திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்:-

தமிழக முதல்வர் – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு தொகுதியில் மாநகர கழகம் சார்பாக, சத்திரம் பேருந்து நிலையத்திலும் மற்றும் ஏனைய பகுதி கழகங்களின் சார்பாக, அரியமங்கலம் – பால்பண்ணை, காந்தி மார்க்கெட்,…

உலக சிலம்ப இளையோர் சம்மேளனத்தின் சார்பில் 600 மாணவர்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது:-

இன்றைய தினம் மே 1ம் தேதி சர்வதேச உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது, உழைப்பை மூலதனமாக கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கும், தங்களை சார்ந்துள்ள குடும்பத்தினர் நலத்திற்காகவும் அரும்பாடு பட்டு உழைக்கும் தொழிலாளர்களை கௌரவிக்கும் விதமாகவும் நாட்டில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகள்…

மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற் சங்கம் சார்பில் அதிமுக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மே 1-ம் தேதி உலக உழைப்பாளர் தினத்தையும் முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் மினி லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி 14-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கீழக்குழிவார் ரோடு பகுதியில்…

திருச்சி தெற்கு திமுக சார்பில் பொது மக்களுக்கு கோடைக்கால நீர் மோர் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டம், திறுவெறும்பூர் தொகுதியில் எஸ்.ஐ.டி, காட்டூர், கைலாஷ் நகர், முனீஸ்வரன்கோயில், திருவெறும்பூர், வாழவந்தான் கோட்டை, எழில்நகர், குண்டூர், சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை தெற்கு…

சாலையில் வீசப்பட்ட ஆதார் கார்டுகள் – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை:-

ஆதார் கார்டு என்பது தற்போது இந்திய குடிமக்களின் மிக முக்கிய ஆவணமாகும். வங்கி கணக்கு, பேன் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட பொதுமக்களின் அத்யாவசிய தேவைக்களுக்கான அட்டைகளில் ஆதாரை இணைப்பது அவசியமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு இணைக்கவில்லை என்றால் மேற்கண்ட சேவைகள் கிடைக்காது…

மே-1 உழைப்பாளர் தினம் – உழைப்பின் பெருமையை சிலை போல் நின்று எடுத்துரைத்த பள்ளி மாணவர்கள்:-

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஈ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக பார்த்திபன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இன்று நம்பர் ஒன் டோல்கேட் அருகே ஆசிரியர் பார்த்திபனின் இல்லத்தின் மாடியில் ஆசிரியர் பார்த்திபன் அவர்களிடம் படிக்கக்கூடிய மாணவர்கள் அவரது உதவியுடன்…