திருச்சி மாவட்டம் பாலக்கரை வேர்ஹவுஸில் அமைந்திருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 15 மணி முதல் பகல் 12 மணி வரை மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று காலை விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், மகா கணபதி, மகாலட்சுமி நவக்கிரக ஹோமங்களுடன், கோ பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 5-ம் தேதி காலை 5 மணிக்கு காவேரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கோவில் அருகே உள்ள யாக சாலையில் வைத்து பூர்ணா ஹதி காலம் ஒன்று யாக பூஜை உடன் ஆரம்பமாகிறது.

அதனைத் தொடர்ந்து 6-ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகள் செய்யப்பட்டு 7-ம் தேதி யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோபுரங்களில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த மகா கும்பாபிஷேக விழாவிற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மதியம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மகா அன்னதான விழா நடைபெற உள்ளது இந்த மகா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினரான தலைவர் சிங்காரவேலு, செயலாளர் கணேசன், பொருளாளர் தினேஷ்குமார், துணைத் தலைவர்கள் மணி, வடிவேல், சிவக்குமார், கமலக்கண்ணன், துணைச் செயலாளர்கள் பிரபு, யோகா, பிரசன்னா ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்