இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பர பிள்ளை அவர்களின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி, முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் சீனிவாசன்,

தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் குடமுருட்டி கரிகாலன், தர்கா சௌகத், கௌதம், சூர்யா, திலீப் மற்றும் மகளிர் அணி நிர்வாகி மதனா தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்