Author: JB

11-அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்.

11-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்…

திருச்சியில் புகைப்படம் இல்லாத வாக்காளர் அடையாள அட்டை – அதிர்ந்து போன வாலிபர்!!!.

திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனி பகுதியை சேர்ந்த வாலிபர் விக்னேஷ்வரன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இவர்கள் தங்கியிருந்த அரசு குடியிருப்பு இடிக்கப் பட்டதையொட்டி வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தார். இதனால் இந்திய தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் அடையாள அட்டையில் இருப்பிடம் முகவரி…

மாந்திரீகம் செய்வதாக ரூ.12 லட்சம் மோசடி: 3-பேர் கைது – மக்களே உஷார்!!!.

அரியலூரைச் சேர்ந்தவர் விஜயகுமார். கடந்த மாதம் இவரை செல்போனில் தொடர்புக் கொண்டு பேசிய நபர்கள், விஜயகுமாருக்கு பில்லி, சூனியம் இருப்பதாகவும், கொல்லிமலைச் சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அதற்கான தொகையை தனது வழங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய…

திருச்சி தென்னூர் உக்கிரமா காளி அம்மன் கோவிலில் குட்டிக்குடி திருவிழா.

திருச்சி தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவிலில் வருடாந்திர குட்டிக்குடி திருவிழா நேற்று முன்தினம் இரவு காளி வட்டம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது நேற்று காலை சுத்த பூஜை நடைபெற்றது.  அதனை தொடர்ந்து அம்மன் தேரில் வீதி உலா வந்தார் தேரானது தென்னூர் காவல்காரன்…

சொத்துவரி உயர்வை கண்டித்து திருச்சி மாநகராட்சி முன்புபுதிய தமிழகம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர்ப்புற சொத்து வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது. இதனை கண்டித்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு புதிய…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் பயிற்சி மாணவர் களுக்கு இலவச பயிற்சி வகுப்பு.

நீதிபதிகள் தேர்வு மற்றும் APP மெயின் தேர்வுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு திருச்சி பழைய மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நடைபெறது. சிறப்பு வகுப்பை 3வது சார்பு கூடுதல் நீதிபதி சோமசுந்தரம் துவங்கி வைத்தார்.…

திருச்சி காவிரி மருத்துவ மனையில் இரத்த சார்ந்த நோய் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை பிரிவு துவக்கம்.

திருச்சி காவேரி மருத்துவமனையில் முதன்முறையாக இரத்த சார்ந்த நோய் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான பிரத்தியோக சிகிச்சை பிரிவு இன்று துவக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் செங்குட்டுவன் ஹெமட்டாலஜி என்பது பல்வேறு…

த.மு.எ.க.ச சார்பில் வருகிற 16, 17-ம் தேதி கல்லூரி மாணவர் களுக்கு ஓவியம், கவிதை, பாடல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, பாடல் எழுதுதல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 16 மற்றும்17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. மதநல்லிணக்கம் அல்லது விடுதலை போராட்டம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி வரும்…

திருச்சி காவிரி கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அல்ல அனுமதி கோரி கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்.

திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் காலம் காலமாக மாட்டுவண்டியில் மணல் அள்ளும் முறையை மாற்றக்கூடாது. மாட்டுவண்டியில் மணல் அள்ள பர்மிட்டுக்கு ரூ224ஐ விட கூடுதல் தொகையை வசூலிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மணல் தட்டுப்பாட்டை போக்க உடனடியாக மாட்டுவண்டி…

திருச்சி மேலப் பாகனூர் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபி ஷேகம் – 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியம் மேலப்பாகனூர் கிராமத்தில் அமைந்து அருள்பாலிக்கும் சித்தி விநாயகர், தானா முளைத்த (சுயம்பு) முத்துமாரியம்மன், மகா காளியம்மன், பகவதி அம்மன், ஐயனார், ஒண்டிகருப்பர், சிவன், நாகநாதர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்களால்…

புதிய மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க சார்பில் ஆட்சியரிடம் மனு.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் திலீப்குமார் ஆட்சியரிடம் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதி சுப்பிரமணியபுரம், டோல்கேட் செல்லும் வழியில் ஒரு கடை மற்றும் கல்லுக்குழி மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோட்டில்…

ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைத்த முதல்வர் ஸ்டாலின் – முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு…

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாம் கைதி வளர்த்த 1500 மரக்கன்றுகள் – தண்ணீர் அமைப்பிடம் வழங்கினார்.

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள கைதி இலங்கைத் தமிழர் மகேந்திரன் தனி மனிதராக வளர்த்த 1,500 மரக்கன்றுகள், 5,000 ற்கும் மேற்பட்ட புங்கன் விதைகள் ஆறு சாக்குகளில் தண்ணீர் அமைப்பிற்காக வழங்கினார். இந்நிகழ்வில் கொட்டப்பட்டு முகாம் துணை சார்பு…

முதல்வரின் அடுத்த சுற்றுப் பயணம் ரெடி – அமைச்சர் தகவல்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 24-ம் தேதி துபாய் சென்றார். அவருடன் சில அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் குடும்பத்தினரும் பயணம் செய்தனர். இந்த பயணத்தின்போது முக்கிய தொழில் நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளதாக அறிவிப்பு…

சொத்துவரி உயர்வை பாதியாக குறைக்க வேண்டும் – முதல்வருக்கு பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கை

தமிழகத்தில் வரலாறு காணாத சொத்துவரி உயர்வை பாதியாக குறைக்க வேண்டும் என – தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- மாநகராட்சி…