Author: JB

திருச்சி எஸ்.ஐக்கு கத்திகுத்து – போதை ஆசாமி வெறிச்செயல்.

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜூலியஸ் சாந்தகுமார் வயது(45).குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் இன்று மாலை சுண்ணாம்பு கருப்பட்டி என்ற இடத்தில் மது குடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்தார் மேலும் அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார்.…

திருச்சியில் (17-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 69 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 492 பேர்…

தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மலைக்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில் விடிவெள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தந்தை பெரியார் அவர்களின் 143வது பிறந்தநாளை சமூகநீதி நாளாக இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது, இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மலைக்கோட்டை…

தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு திமுக, அதிமுக, மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளையொட்டி திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர செயலாளர்…

தலைமை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் காயம் – காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்.

திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை யாத்ரி நிவாஸ் தோப்பில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி ஆனந்த் இவரது மனைவி நதியா இவர்களுக்கு இரண்டு ‘மகன்கள் மூத்த மகன் ஜீவா திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம்…

அதிமுக ஆட்சியில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட ( professional English ) வகுப்பு ரத்து – திருச்சி சிவா எம்.பி பேட்டி.

தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி காஜா மலையிலுள்ள பெரியார் ஈ.வெ.ரா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பெரியாரின் திரு உருவ சிலைக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்…

பிஜேபி கட்சி கொடி கம்பம் வைப்பதில் மாநகராட்சி அதிகாரிகளுடன் பிஜேபியினர் வாக்குவாதத்தால் பரபரப்பு

இந்திய பிரதமர் மோடி அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் 10வது கிராஸ், 80 அடி ரோடு கார்னர் பகுதியில் பிஜேபி சார்பில் கட்சி கொடி ஏற்றுவதற்காக 20 அடி உயரத்தில் நேற்று மாலை கான்கிரீட் மூலம் கட்சியின்…

திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சின்ன மண்டவாடி பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரின் மகன் ரஞ்சித் குமார் வயது 24 திருச்சி பெரிய மிளகுபாறையிலுள்ள கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரியில் MBBS UG Student (House Sourgeon) பயின்று வருகிறார். தற்போது கல்லூரி…

தற்காலிக மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் கேட்டு மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட வியாபாரிகள்.

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே ஆங்கிலேயர் ஆட்சியில் காலத்தில் கட்டப்பட்ட 120 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கட்டிடம் இயங்கி வருகிறது இந்த கட்டிடத்தை கேனா கடை என்று எல்லோராலும் அழைக்கபடும் மீன் மார்க்கெட் இறைச்சிக் கடை கோழிக்கறி கடை ஆகியவை…

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

செப்டம்பர் 16 இன்று உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் வளாகத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் நாகலிங்கம் நாவல்பழம் ,கொய்யா, நெல்லி உள்ளிட்ட மரகன்றுகள் நடும்…

திருச்சியில் (16-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 62 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 510 பேர்…

குண்டூர் அய்யம்பட்டி விநாயகர் கோவில் செல்லாயி அம்மன் சப்பாணி கருப்பு கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் குண்டூர் அய்யம்பட்டி கிராமத்தில் உள்ள விநாயகர், செல்லாயி அம்மன், சப்பாணி கருப்பு கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த திங்கள் கிழமை காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்…

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடந்த ஒசோன் தின விழா

திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டி தொடக்கப்பள்ளியில் உலக ஓசோன் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மக்கள் சக்தி இயக்கம் மாநில ஆலோசகர் நீலமேகம் தலைமை தாங்கிட, சிறப்பு அழைப்பாளர்களாக மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் , கலைக்காவிரி தமிழ்த்துறை உதவிப்…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அன்னதான திட்டம் – காணொலி மூலம் தொடங்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக , இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருச்செந்தூர்- அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய…

பி.சி.ஆர் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் – ஸ்ரீரங்கம் மருத்துவர் சமூக நல சங்கம் கோரிக்கை.

ஆண்டுதோறும் செப்டம்பர் 16ஆம் தேதி உலக முடி திருத்துவோர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஸ்ரீரங்கம் மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் ஸ்ரீரங்கத்தில் இன்று உலக முடிதிருத்துவோர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைவர் சண்முகசுந்தரம்…