Category: திருச்சி

திமுக அரசை கண்டித்து – பாஜக மனித சங்கிலி போராட்டம்.

பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தும், தமிழகத்தை ஆளும் திமுக அரசு குறைக்காததை கண்டித்து தமிழக பாஜக அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு மற்றும் ஓபிசி அணி இணைந்து திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து மேலப்புதூர் மேம்பாலம் வரை மனித…

முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஜிஎச் முன்பு உறவினர்கள் சாலை மறியல்.

திருச்சி ஸ்ரீரங்கம் தாலுக்கா, செங்கதிர் சோலை பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவகுமார் என்பவரை அதே ஊரை சேர்ந்த இருவர் கட்டையால் அடித்து படுகொலை செய்தனர். இது குறித்து சிவக்குமாரின் மனைவி மைதிலி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில்…

உலக கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழுவில் திருச்சி இளைஞர் நடுவராக தேர்வு.

உலக கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழுவில் நடுவராக தேர்ச்சி பெற்ற காளீசன் இளஞ்செழியனுக்கு பாராட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நடுவராக தேர்ச்சி பெற்ற காலீசன் இளஞ்செழியன் அவர்களுக்கு கராத்தே பயிற்சியாளர்கள்,…

பிச்சை எடுக்கும் போராட்டம் – கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.

ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு, மக்கள் உரிமை கூட்டணி ,அகில இந்திய ஏழை மக்கள் கட்சி, அமைப்புசாரா தொழிற்சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று( திங்கட்கிழமை) பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்…

பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத திமுக அரசை கண்டித்து – பாஜக வர்த்தக அணி முற்றுகை போராட்டம்.

திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. வர்த்தகர் பிரிவு, பட்டியலின அணி சார்பில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத திமுக அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் இன்று அக்கட்சியினர் திருச்சி கலெக்டர் அலுவலகம்…

கணவர் கொலைக்கு பிரபல அரசியல்வாதி, தொழிலதிபர் காரணம் – போலீசில் மனைவி புகார்.

திருச்சி ஸ்ரீரங்கம் தாலுக்கா, செங்கதிர் சோலை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவரது மனைவி மைதிலி இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவில் மற்றும் இடப்பிரச்சனை சம்பந்தமாக…

கத்தியை காட்டி வழிப்பறி செய்த 2- பேர் – குண்டர் சட்டத்தில் கைது.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கடந்த சில மாதங்களாக திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்தும் , குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் ரோந்து செய்தும் , தீவிர வாகன தணிக்கை செய்ய…

வெள்ள பாதிப்பு பகுதிகளை அமைச்சர் கே என் நேரு ஆய்வு.

  கோரையாற்றின் கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரினை அகற்றிடவும், கரைகளை மேலும் பலப்படுத்தி மழைநீர் உள்ளே வராத அளவிற்கு நடவடிக்கை எடுத்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் இப்பகுதி மக்களுக்கு உணவினையும்…

குடமுருட்டி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் கே என் நேரு.

திருச்சி வயலூர் சாலையில் உள்ள குடமுருட்டி ஆற்றில் நீர் நிறைந்து மிகைநீர் வடிந்து ஆதிநகர், பாத்திமா நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்வதைத் தடுத்திடும் வகையில் ,கரையில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகத்…

டிச.4-ம் தேதி திருச்சியில் பொதுக்குழு கூட்டம் – பொ.சு.அ.அ. சங்க தலைவர் பகவதியப்பன் தகவல்.

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் பகவதியப்பன் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் வேல்முருகன் வரவேற்றார் .முடிவில் மாநில பொருளாளர் ஜோதி…

சாலைகளை மறைத்த வெள்ளம் – தனி தீவான தீரன்நகர்.

திருச்சி கோரையாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் ஆறுபோல் வழிந்தோடுகிறது. மேலும் தீரன் நகர், அருண் நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி தெருக்களில் தண்ணீர் இரவு முதல் தொடர்ந்து வெள்ளம் போல பாய்ந்து…

மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த குடும்பத் தினரை மீட்ட திருச்சி தீயணைப்பு வீரர்கள்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து…

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜனிடம் விருப்ப மனு அளித்த முன்னாள் கவுன்சிலர் மகாலட்சுமி.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெரும் பணி அதிமுகவில் தொடங்கியுள்ளது. இதற்காக திருச்சி மாநகர் மாவட்டக் கழக அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சரும் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தேர்தலில்…

கிழக்கு தொகுதியின் அவல நிலை – உயிரைப் பறிக்க காத்திருக்கும் மின்கம்பம்.

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காஜா பேட்டை அண்ணா நகர் தெரு உள்ளது. இந்தத் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. குறிப்பாக இந்ந தெருவின் மத்தியில் உள்ள மின்கம்பம் நீண்ட நாட்களாக சிமென்ட் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து, இரும்பு…

புதிய விமான நிலையத்தின் 65% விரிவாக்கப் பணிகள் – எம்.பி திருநாவுக்கரசர் பேட்டி

சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ள திருச்சி விமான நிலையத்தில் விமான ஓடுதளம் மற்றும் பயணிகள் முனையம் போன்றவற்றை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது, இதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலைய விரிவாக்க கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது..  விமான நிலைய…