Category: திருச்சி

பால், மின் கட்டணம் , சொத்து வரியை உயர்த்திய திமுக அரசை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திமுக அரசு பதவி ஏற்ற பின்பு பால் கட்டணம் ,மின் கட்டணம்,சொத்து வரி உயர்வு ஆகியவற்றை உயர்த்தி உள்ளது இதனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி…

திருச்சி ஹோலி ரெடிமர்ஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா போட்டிகள் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு.

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஹோலி ரெடிமர்ஸ் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன இதில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு மியூசிக்…

திருச்சி பஸ் ஸ்டாப்பில் இயங்கி வரும் அங்கன் வாடி மையம் – தீர்வுக்கான கோரி கவுன்சிலரிடம் மனு அளித்த SDPI கட்சியினர்.

திருச்சி 29-வது வார்டு ஆழ்வார் தோப்பு பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் கடந்த 6 மாத காலமாக தற்காலிகமாக தகர ஷீட்டுகளால் அமைக்கப்பட்டு இயங்கி வரும் அங்கன் வாடியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். அப்படி பட்ட இந்த அங்கன்வாடி…

திருச்சியில் விலை உயர்ந்த டூவீலர்களை திருடிய ஓட்டுனர் உள்ளிட்ட 3 பேர் கைது. டூவீலர்கள் மீட்பு.

சென்னையில் இருந்து கடந்த 12-ம் தேதி 40 என்பீல்டு புதிய இருசக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி மூலம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கண்டெய்னர் லாரியை ஓட்டுனர் சுதாகர் வயது 42 என்பவர் ஓட்டி சென்றார்‌. இந்நிலையில் தஞ்சாவூர்…

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள தனது கணவர் முருகனை சந்தித்த நளினி,

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள தனது கணவர் முருகன் உள்ளிட்ட நால்வரும் முகாமில் தங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டி உண்ணாவிரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்…

திருச்சியில் வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

கத்தோலிக்க தலித் கிறிஸ்தவ வீட்டு மனை கோருவோர் நல அமைப்பு தலைவர் அம்பு ரோஸ் தலைமையிலான குடியிருப்பு வாசிகள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;-, ஸ்ரீரங்கம் தாலுகா சேதுராப்பட்டி பாத்திமா நகர் பகுதியில்…

யாசகம் பெற்ற ரூ.10,000 பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆலங்கெணறு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 72). இவர் யாசகம் பெற்று வரும் தொகையை சமூக நலப் பணிகளுக்கு அளித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரத்தில் தேவகோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் யாசகத்தின் மூலம் பெற்ற…

திருச்சியில் வாலிபர் கடத்தி கொலை – காவேரி ஆற்றில் வீசப்பட்ட உடலை தேடும் போலீசார்.

திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன். இவரது மகன் நாகூரான் என்கிற நாகூர் மீரான் (வயது 29). இவர் கடந்த 4 நாட் களுக்கு முன் இ.பி.ரோடு அந் தோணியார் கோவில் தெரு ஆர்ச் அருகே தனது சகோதரி தாஜ்…

திருச்சி மகாத்மா கண் மருத்துவ மனை சார்பில் அதிநவீன கண்புரை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் பயண் பெரும் வகையில் திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை சார்பில் அதிநவீன கண்புரை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திருச்சி சாலை ரோட்டில் பழைய கோஹினூர் திரையரங்கம் எதிர்புரம் உள்ள இந்தியன் மெடிக்கல் அசோஸியேஷன் கூட்டரங்கில் நடைபெற்றது…

முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் விடுதலை செய்யப் பட்டவர்கள் திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டனர்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 31 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 6 பேரும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.…

திருச்சி அகர்வால் கண் மருத்துவ மனை மற்றும் ரேபிடோ பைக் டாக்சி நிறுவனம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

திருச்சி தில்லை நகரில் உள்ள கி.ஆ.பெ ஆரம்ப பள்ளியில் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ரேபிடோ பைக் டாக்சி நிறுவனம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. அகர்வால் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் கணபதி தலைமையில்…

திருச்சியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட வியாபாரி – போலீசார் விசாரணை.

திருச்சி காந்தி மார்கெட் ஜெயில் பேட்டை ரோட்டில் ஆறுமுகம் என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான கடையை அவர் ராஜா என்பவருக்கு உள் வாடகைக்கு விடுவதற்காக ரூ. 1 லட்சம் பெற்றுள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்தின் மகன் ரங்கராஜ் என்பவர்…

திருச்சி மாநகர ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு – ஏராள மானோர் பங்கேற்பு.

திருச்சி மாநகரில் ஊர்காவல்படையை சேர்ந்த ஆளிநர்கள் முக்கிய நபர்கள் வருகையின் போது பாதுகாப்பு, போக்குவரத்தை சீர்செய்தல், இரவு ரோந்து போது காவலர்களுடன் சேர்ந்து பணியாற்றுதல் என பல்வேறு வகையில் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். திருச்சி மாநகரில் ஊர்காவல்படையினரின் வலுபடுத்தும் வகையில் காலியாக…

திருச்சியில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 2-ரவுடிகள் குண்டாசில் கைது – கமிஷனர் அதிரடி.

திருச்சி பாலக்கரை மணல்வாரிதுறை ரோடு பகுதியில் பழைய இரும்பு பேப்பர் கடை நடத்திவருபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ .1000 / – பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி சந்திரசேகர் ( எ )…

திருச்சியில் தொடர் மழை காரணமாக நாளை 12ம் தேதி பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை – கலெக்டர் அறிவிப்பு.

திருச்சி மாவட்டத்தில் இன்று 11-ம் தேதி விடியற்காலை முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார்…