திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மத்திய மோடி அரசு கரும்பு டன் ஒன்றுக்கு 8,100 ரூபாய் தருவதாக கூறி தற்பொழுது 2900 மட்டுமே வழங்கி வருகிறது.

ஆனால் ஆரூரன் சக்கரை ஆலையில் முதலாளிகள் ரூபாய் 1550 மட்டுமே தருவதாக தெரிவிக்கின்றனர். இதனைக் கண்டித்தும் உடனடியாக கரும்புக்கான விலையை உயர்த்தி வழங்கவும் அதற்குரிய நடவடிக்கை மோடி அரசு மேற்கொள்ளவும், காவிரியில் 500 டிஎம்சி தண்ணீர் வீணாக்க கடலில் கலக்கிறது இதில் 10டிஎம்சி தண்ணீரை அய்யாற்றுடன் இணைத்தால் ஒரு லட்சம் ஏக்கர் சாகுபடி செய்வதுடன்

சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட சுமார் ஒரு கோடி மக்களுக்கு குடிநீர் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த மாநில தலைவர் அய்யாகண்ணு உடனடியாக கரும்புக்கு விலை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி விரைவில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *