கொரோனாவால் இறந்த தாயின் உடலை சுடுகாடு வரை தூக்கி சென்ற மகன்

கொரோனா நோய் தோற்றல் உயிரிழந்த தாயின் சடலத்தை மகனே தனது தோளில் சுமந்தபடி இடுகாடு வரை தூக்கி சென்று தகனம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் பாங்வார் மாவட்டத்தைச் சேர்ந்த வீர் சிங் என்பவரின் தாய்க்கு…

ஊரடங்கில் சாராயம் கடத்திய இருவர் கைது.

குடியாத்தம் அருகே போலீசாரின் வாகன சோதனையின் போது விற்பனைக்காக சாராயம் எடுத்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்து, 60 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

திருச்சி கலெக்டராக மீண்டும் சிவராசு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்துதிருச்சி மாவட்ட கலெக்டராக திவ்யதர்ஷினி நியமனம் செய்யப்பட்டார். மேலும்…

திருச்சியில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனாவுக்கு 15 பேர் பலி

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 7488 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1544 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 860 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…

முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதி 50 லட்சம் வழங்கிய நடிகர் ரஜினி

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு ரஜினிகாந்த் பேட்டியளித்தார். அப்போது, கொரோனாவை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மக்கள்…

7-சிறப்பு ரயில்களை ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு.

தமிழகத்தில் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பயணிகளிடம் இருந்து போதிய வரவேற்பு இல்லாததால் 7 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.அதன்படி…

கொரோனா சிகிச்சைக்கு படுக்கை, ஆக்ஸிஜன் ஆன்லைன் புக்கிங் “வார் ரூம்” அறிவிப்பு.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சமீபத்தில் கையில் எடுக்கப்பட்ட முயற்சி “வார் ரூம்”. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டதின் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த கொரோனா கட்டளை மையம் (Unified…

மத்திய அமைச்சர் பங்கேற்ற புதிய கல்விக் கொள்கை ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த தமிழக அமைச்சர்.

புதிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், துறைஅதிகாரிகளும் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

கொரோனாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்திய திருச்சி மக்கள்…

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மே 10-ம் தேதி முதல் காலை…

பிரபல நடிகர், பாடலாசிரியரின் மனைவி ஆகியோர் கொரோனாவுக்கு பலி.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு பொதுமக்கள் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து…

இன்று முதல் வெளியூர் செல்ல இ-பதிவு முறை கட்டாயம்

தமிழகத்தில் இன்று முதல் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் வரும் மே 24 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இன்று முதல் (மே 17) முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ-பதிவு…

கொரோனாவால் இறந்தவரின் உடலில் எறும்புகள்- உறவினர்கள் அதிர்ச்சி.

கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவரின் உடல் முழுவதும் எறும்புகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவரை சரியான முறையில் பாதுகாப்பாக, பேக் செய்யாமல் போர்வையால் சுற்றி கொடுப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளது என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. தஞ்சாவூர்…

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளை முறையாக பயன்படுத்தவில்லை – திமுக எம்எல்ஏ பகிரங்க குற்றச்சாட்டு.

திருச்சி உய்யகொண்டான் கிளையான தஞ்சை ரோடு பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால்கள் கடந்த பல வருடங்களாக குப்பைகள் நிரம்பி வாய்க்கால் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருந்தன.இதன் காரணமாக மழைக்காலங்களில் உய்யக்கொண்டான் ஆற்றுப்பகுதியில்வரும் தண்ணீர் கழிவுநீர் கால்வாய் வழியாக வீடுகளுக்குள் புகுந்து…

பணியாளர்களுக்கு மருத்துவ தொகுப்பு – அமைச்சர்கள் வழங்கினர்.

திருச்சி கருமண்டபம் பகுதியில் கொரோனா நோய் தோற்று அதிகம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருத்துவ தொகுப்பு வழங்கும் நிகழ்வின் தொடக்கவிழா இன்று நடந்தது. இந்த விழாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

அனாதை பிணங்களுக்கு உதவும் தம்பதி.

கொரொனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் ஏழை , எளிய பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். கொரொனா பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கையும் கூடிய வருகிறது. கொரொனா பாதிப்பு ஒருபுறம் என்றால் சாலையோரவாசிகளாக வாழக்கூடிய ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்ட முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர்கள் நிலை…