அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த தீர்ப்பில் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் எடப்பாடி கே.பழனிசாமியின் மேல்முறையீட்டை அனுமதித்து, தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்ததோடு ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில் அந்த தீர்ப்பினை தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் துறையூர் பாலகரை பகுதியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அப்போது பட்டாசு வெடித்ததில் எதிர்பாராத விதமாக தீ பொறி அதிமுக பெண் நிர்வாகி ஒருவரின் புடவையில் பட்டு தீ-பிடித்து எரிந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அந்த பெண் நிர்வாகியை காப்பாற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *