திருச்சி , அரியமங்கலம் சிட்கோ டி.டிட்சியா கூட்டரங்கில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கூட்டமைப்புப் பிரநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஊரகத்தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் அருண்ராய், குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ், மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 7 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மாஸ்க் அணிந்து இருந்த நிலையில் திருச்சி மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் மட்டும் மாஸ்க் அணியாமல் இருக்கையில் அமர்ந்து இருந்தது தற்போது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்று தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் தலைமையில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா நோய் தொற்று பரவலை ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளின் மூலம் கொரோனா நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மீண்டும் இந்த கொரோனா நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் முககவசம் அணியாதவர்கள் மீது அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியமங்கலம் சிட்கோ டி.டிட்சியா கூட்டரங்கில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கூட்டமைப்புப் பிரநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள், கலெக்டர் அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் முககவசம் அணிந்திருந்த நிலையில், மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் மட்டும் முககவசம் அணியாமல் கூட்டத்தில் பங்கேற்றது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *