திருச்சியில் கலைஞர் 98வது பிறந்தநாளை முன்னிட்டும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள கலைஞர் அறிவாலயம். கரூர் புறவழி சாலை, சாஸ்திரி சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் முதல் கட்டமாக நிழல் மற்றும் ஆக்சிசன் தரக்கூடிய மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.இதில் வேம்பு,புங்கன், மகிழம், அரசு,ஆல், நாவல், ஏழிலை பாலை, மகாகனி உள்ளிட்ட மரவகைகள் 25 ஆயிரம் எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை நடுவதற்கான துவக்க விழாவும் நடைபெற்றது.இவ்விழாவில் மரக்கன்றுகளை நட்டு விழாவை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று துவங்கி வைத்தார்..

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,கள்ளச் சந்தையில் கறுப்புப் புஞ்சைக்கான மருந்துகள் விற்பதாக தெரிந்தால் உடனே சிறையில் அடைக்கப்படுவார் என்றும், கொரோனா தடுப்பூசி அதிக அளவில் செலுத்திக் கொண்டது திருச்சி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.மேலும் தேவையான தடுப்பூசிகள் விரைவில் வந்து சேரும் என தெரிவித்தார்இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், மாநகராட்சி தலைமை பொறியாளர் அமுதவல்லி, மாவட்ட வனத்துறை அலுவலர் சுஜாதா,மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார், பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜி, கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *