திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பாக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் ஆலோசனை கூட்டம் திருச்சி தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் அதிமுகவை அபகரிக்க நினைக்கும் சசிகலாவை கண்டித்து கீழ்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அவரின் மறைவுக்குப் பின் கழகத்தை காணாமல் போகச் செய்தனர் நினைத்தவர்களின் எண்ணத்தை தூளாக்கி மீண்டும் அதிமுகவை உலகம் புகழும் இயக்கமாகக்கி காட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.தனது வாழ்வின் 34 ஆண்டுகளாக கட்சியின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டின் உயர்வுக்காகவும் ஆயிரம் இன்னல்களுக்கிடையே அரும்பாடுபட்டவர் நமது அம்மா.எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகிய இருவரும் தலைவர்கள் மீதும் உயிரினும் மேலான அன்பு கொண்ட ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைந்து கண்ணை இமை காப்பது போல அதிமுகவை காத்து காவல் தெய்வங்களாய் பணியாற்றி வருகின்றனர்.அம்மாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கழகத்தில் புயல் வீசி அனைத்தும் தகர்ந்து விடும் என்று எண்ணி இருந்தவருக்கு ஏமாற்றத்தை அளித்து அம்மா அவர்கள் விட்டுச் சென்று ஆட்சியை முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்று வெற்றிகரமாக இந்தியத் துணைக்கண்டத்தில் அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக திகழ்கிறது ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.,இந்த சாதனையைக் கண்டு எதிரிகள் வியந்து நிற்கிறார்கள்.பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து மக்களிடம் நாடகமாடி தேர்தலை சந்தித்த திமுக சட்டமன்ற தேர்தலில் 3% வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது.அனைத்து சூழ்ச்சிகள் தந்திரங்களையும் முறியடித்து மக்களின் அன்பைப் பெற்று அதிமுக தலைமையிலான கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெற்றது பிரதான எதிர்க்கட்சியாக 66 சட்டமன்ற உறுப்பினர்களை தமிழ் நாட்டின் நலனுக்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்பி உண்மை மக்கள் தொண்டர்களாக பணியாற்ற உள்ளனர்.தேர்தலுக்கு முன்பு அரசில் இருந்து ஒதுங்கியிருக்க போவதாக அறிவித்த சசிகலா தற்போது கட்சி வலுவாகவும், பொலிவாகும், தொண்டர்கள் பெரும் படையும் பெற்று இருப்பதை பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தை தேடிக்கொள்ள கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப் போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதை ஊரறிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுமாக வினோத நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.*மாபெரும் இயக்கமான அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்த சசிகலாவின் கபட நாடகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்*தொடர்ந்து சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கட்சியின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் அவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் , மற்றும் மூத்த முன்னோடிகள் எடுத்துள்ள நிலைப்பாட்டினை வடக்கு மாவட்டத்தின் சார்பில் மனதார வரவேற்கிறோம்
தீர்மானம் 2 :

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், முசிறி,மண்ணச்சநல்லூர் துறையூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் அதிமுகவுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும், தேர்தல் பணியாற்றிய பல கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தீர்மானம் 3:
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி, துணைத் தலைவராக ஓபிஎஸ், கொறடாவாக எஸ்.பி. வேலுமணி, துணை கொரடாவாக எஸ். ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜு, செயலாளராக கேபி அன்பழகன், துணை செயலாளராக பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது வடக்கு மாவட்டத்தின் சார்பாக நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தீர்மானம் 4:
கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்றுல் இறந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழில் கொரோனா தோற்றால் இறந்தவர்கள் என குறிப்பிடவில்லை என மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.ஒரு நாள் நோய் தொற்றால் இறந்தவர்களுக்கு மத்திய மாநில அரசு அறிவிக்கும் நலத்திட்ட உதவிகள் பாதிக்கப்பட்டவர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது எனவே உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அறிவுரையின்படி நோய்த்தொற்று இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் உண்மை காரணத்தை குறிப்பிட வேண்டுமென தமிழக அரசை வடக்கு மாவட்ட சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது மேலும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருந்தை வழங்கி முற்றிலும் குணமடைய வேண்டி கேட்டுக்கொள்கிறோம். ஒரு நோயாளி வந்தவுடன் அனைவருக்கும் புறநகர் வடக்கு மாவட்ட சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தீர்மானம் 5:
ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் வடக்கு ஒன்றியத்தில் பெட்டவாய்த்தலை , பலங்கவேரி கிராமத்தில் 2011ம் ஆண்டு நிறுவப்பட்ட புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழா கல்வெட்டை மர்ம நபர்கள் இடித்து உடைத்து விட்டனர். இந்த செயலை கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது, கல்வெட்டை இடித்தவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.மேற்கண்ட இந்த 5 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதுஇந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, பகுதி,நகர,பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *