ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி திருச்சியில் நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையம் முதல் மேலப்புதூர் வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலியில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக புனித ஜான் பால் உரையாடல் மன்ற இயக்குநர் அருள்பணி முனைவர் க. சார்லஸ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வி. ரங்கராஜன், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முனைவர் அ. ஹஜ் மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டு போதைப் பொருட்களால் குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினர். போதை இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் பஷீர் அஹமது, தலைமை ஆசிரியர் வல்லூறு காந்தி, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருச்சி மக்கள் தொடர்பு செயலாளர் நவாஸ் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முஹம்மது யாஸீன் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கமாலுதீன் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்