தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த முகாமை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த சிறப்பு முகாமில் கண் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், இருதயம் சார்ந்த மருத்துவம், ECG/ECHO, ஆண்கள், பெண்களுக்கான பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு மருத்துவம், காது மூக்கு தொண்டை மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் நடந்த சிறப்பு முகாமில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் 24 பேர் செவிலியர்கள் 37 பேர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இந்த சிறப்பு முகாமில் மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், அப்துல் சமத், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, நகர் நல அலுவலர் யாழினி உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்