திருச்சி பாலக்கரை மணல்வாரிதுறை ரோடு பகுதியில் பழைய இரும்பு பேப்பர் கடை நடத்திவருபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ .1000 / – பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி சந்திரசேகர் ( எ ) சந்துரு வயது 28 என்பவரை கைது செய்து , நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மேலும் விசாரணையில் குற்றவாளி சந்திரசேகர் ( எ ) சந்துரு மீது முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து ஒருவரை கொலை செய்த 1 வழக்கு , 2 திருட்டு வழக்குள் , 5 அடிதடி வழக்குகள் , பொது அமைதிககு பங்கம் விளைவித்தாக 2 வழக்குகள் உட்பட 14 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

மேலும் இதேபோல் காஜாபேட்டை மெயின்ரோடு வாட்டர்டேங்க் அருகில் நடந்து ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ .900 / – பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , குற்றவாளி தாமஸ் ஆன்டனி 22 என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மேலும் விசாரணையில் குற்றவாளி தாமஸ் ஆன்டனி மீது கத்தியை காட்டி பணம் பறித்ததாக 2 வழக்குகள் , 2 திருட்டு வழக்குள் , அடிதடி வழக்கு என 5 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது . . எனவே , குற்றவாளிகள் சந்திரசேகர் ( எ ) சந்துரு மற்றும் தாமஸ் ஆன்டனி ஆகியோர் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் , குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பவர்கள் என விசாரணையில் தெரியவருவதை தொடர்ந்து குற்றவாளிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார் . அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள் . மேலும் , திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *