திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு செய்தார் .

அதனைத்தொடர்ந்து திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரொனா சிறப்பு மருத்துவ முகாமை திறந்து வைத்து , 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கான கொரொனா தடுப்பூசி முகாமில் முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை ஆய்வு செய்து பார்வையிட்டார் .
மேலும் தேசிய தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 320 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா நலவாழ்வு மையத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தார்.
அருகில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் . நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா . சுப்பிரமணியன் , பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி என் . சிவா மற்றும் திருநாவுக்கரசர் , சட்டமன்ற உறுப்பினர்கள் , மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு , மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *