திருச்சி மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில்இருசக்கர வாகனம் திருடப்பட்டு வந்தது இதனைத் தொடர்ந்துதிருட்டில் ஈடுபட்டு வரும்திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படிதனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று உறையூர் குற்ற தனிப்படை காவல்துறையினர் புத்தூர் நால்ரோடு அருகில் வாகன தணிக்கையில்ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் காவல்துறையினரைகண்டதும் தப்பிக்க முயன்றனர். அவர்களை விரட்டிப் பிடித்து விசாரணை செய்த போது, அவர்கள்முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில்உறையூர், அரசுமருத்துவமனை, கண்டோன்மென்ட், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்தது. மேலும் விசாரணையில் திருச்சி செந்தண்ணீர்புரம்,அண்ணாநகர்பகுதியை சேர்ந்த ராஜூ என்பவரது மகன் ராஜா(32), மற்றும் திருச்சி தில்லைநகர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஆண்டவன் என்கிற நல்லாண்டவர் (34)என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 2,00,000/- மதிப்புள்ள6இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் திருச்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு. பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *