மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 – வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப் பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் கார்த்திகேயனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

டெல்லியில் கடந்த ஆண்டு 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தை துவக்கியுள்ளனர் அதற்கு ஆதரவாக திருச்சியில் வருகிற 11.10.2021 முதல் 26.11.2021 வரை 46 – நாட்கள் திருச்சி மாநகர் பகுதியில் உள்ள சிந்தாமணி அண்ணாசிலை, ஜங்ஷன் பெரியார் சிலை, தலைமை தபால் நிலையம், தில்லைநகர் பாஸ்போர்ட் ஆபீஸ் மற்றும் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள அய்யாக்கண்ணு இல்லம் உள்ளிட்ட இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி மாநகர போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி நீதிமன்றத்தின் உத்தரவுப்படி உண்ணாவிரத போராட்டம் நூதன முறையில் நடைபெறும். தற்போது விவசாயிகள் ஆகிய எங்களை கடந்த 9- நாட்களாக வீட்டு காவலில் காவல்துறையால் வைக்கப்பட்டுள்ளோம் இது எங்களுக்கு மேலும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *