திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மேம்பட்ட மார்பக ஊடு கதிர்,டிஜிட்டல் ஃப்ளோரோஸ் கோபி,நவீன முறை எக்ஸ்ரே கருவி உள்ளிட்ட 3.7 கோடி மதிப்பீட்டில் கருவிகளை மக்கள் பயன்பாட்டிற்காக நிர்வாக வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார் செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர்,

முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி இந்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரிடம கூடுதலாக வசதி ஏற்படுத்தித்தர உதவி கேட்டுள்ளோம்.மற்ற மாவட்டங்களை விட திருச்சி மருத்துவக் கல்லூரி சிறந்த மருத்துவக் கல்லூரி ஆக வருவதற்கு முழு முயற்சி எடுத்து வருகிறோம். முக்கொம்புவில் இருந்து கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றுக்கு சுமார் 1.50 லட்ச கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.நீர்வரத்து அதிகம் உள்ளதால் காவல்துறையினர்கள்,தீயணைப்பு துறையினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு வாரங்களில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சட்ட ஒழுங்கை அதற்கு காரணம் காட்டக்கூடாது என்ன செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்:-

நீதிமன்றம் கூறியுள்ளது ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றுவதற்கு முன் அவர்களுக்கு தகுந்த இடம் கொடுத்துவிட்டு அகற்ற வேண்டும் இதனை முதலமைச்சரும் கூறியுள்ளார். நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி சென்னையில் சமீபத்தில் ஆக்கிரமிப்பு இடம் அகற்றப்பட்டது அதற்கு பெரிய பிரச்சனை ஏற்பட்டது. எனவே தகுந்த இடம் அவர்களுக்கு வழங்கப்பட்ட பின் ஆக்கிரமிப்பு இடங்கள் அகற்றப்படும் என்றார்.

காவிரி ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகரித்து வருகிறது.எனவே பொதுமக்கள் யாரும் தண்ணீரில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *