திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் மற்றும் மாவட்ட அண்ணா தொழில் சங்கம் சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ராசி மகாலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் தமிழரசன், மாநிலத் தலைவர் தனபால், பொருளாளர் அப்துல் ஹமீது, மாநில போக்குவரத்து பிரிவு செயலாளர் பழனி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். திருச்சி மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கார்த்தி, மாநில பீடி மற்றும் தீப்பெட்டி பிரிவு செயலாளர் சகாபுதீன், மாநகர அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஞானசேகர் ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

கழக அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன், மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் யோகநாதன், கிழக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார், ஜெயலலிதா பேரவை துணை செயலாளரும் கவுன்சிலருமான அரவிந்தன், மாநில சிறுபான்மை நலப் பிரிவு துணை செயலாளர் ஆர்.எஸ். புல்லட் ஜான், பேரவை துணைச் செயலாளர்கள் ஜெயம் ஸ்ரீதர்,டி ஆர் சுரேஷ் குமார், மகளிர் அணி துணை செயலாளர் சுபத்ரா சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர துணை தலைவர் அன்பழகன் நன்றி கூறினார்.
