ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (SKM) திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சி மிளகு பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் புறநகர் மாவட்ட தலைவர் நடராசன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசூரியன் தொகுப்புரை நிகழ்த்தினார்.

இதில் புதிய மாவட்ட குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு:- 1)அயிலைசிவசூரியன்-தமிழக விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்பாளர், 2)லே.செழியன் -மக்கள் அதிகாரம் துணை ஒருங்கிணைப்பாளர், 3)நடராசன் – பொருளாளர் அகில இந்திய விவசாயிகள் சங்கம், 4) கென்னடி -தமிழ் தேச மக்கள் முன்னணி, 5) ரவிக்குமார்- நிறுவனத் தலைவர் சமூகநீதி பேரவை 6)சம்சுதீன்- ஒருங்கிணைப்பாளர் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஆகியோர் புதிய நிர்வாக குழுவாக தேர்வு செய்யப்பட்டனர்.

நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:- 1)வருகின்ற 3ம்தேதி கருப்பு பேட்ச் அணிந்து கருப்பு கொடியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆர்ப்பாட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது. அதேபோல் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள்:- 1)மத்திய அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் 2)புதிய மின்சார சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். 3)நிலத்தடி நீர் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கும் புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு தீர்மானம் – மக்களை பாதிக்கக்கூடிய புதிய மின் கட்டணம் உயர்வைமாநில அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கென்னடி, சமூக நீதிப் பேரவை ரவிக்குமார், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சம்சுதீன், அமைப்புசாரா தொழிலாளர் இயக்கம் சைனி, விவசாய தொழிலாளர் சங்கம் தங்கதுரை, அகில இந்திய விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ராமநாதன், மக்கள் அதிகாரம் தோழர் செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் அயிலை சூரியன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்