திருச்சி மாநகரில் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா நோய் தொற்றை பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்காகவும் மற்றும் தொற்று நோய்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக 30 லட்சம் மதிப்பிலான கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களை மாநகராட்சி வாங்கியுள்ளது.

இந்த கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களின் செயல்பாடுகளை மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் தலைமையில் நகராட்சி நகர் நல அலுவலர் பிரசீலா கலாமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 5- மண்டலங்களுக்கு தலா ஒரு கொசு மருந்து அடிக்கும் 5-வாகன இயந்திரங்களும், ஊழியர்கள் தங்களின் தோள்களில் சுமந்தபடி கொசு மருந்து அடிக்கும் 25 இயந்திரங்கள்

என முதற்கட்டமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட கொசு மருந்து இயந்திரங்கள் திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது கோயம்புத்தூர் தங்கம் அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர் திருவேங்கடம், மேலாளர் வேளாங்கண்ணி, முதன்மை விற்பனை மேலாளர் அருண் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *