திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரைபில் கிளப் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது . மாவட்ட , மாநில , தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் நிர்வாகத்தின் கீழ் இந்த ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது .

 திருச்சி மாநகர ரைபில் கிளப்பில் மொத்தம் 215 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் உள்ளனர் . மேலும் ரைபிள் கிளப்பில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும் , 25 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும் , 10 மீட்டர் தூரத்தில் மூன்று சுடுதளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது .

இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் 13 வது தென்மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியை திருச்சி ரைபிள் கிளப் தலைவர் / திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார் .

இந்த தொடக்க நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி , மாநகர துணை ஆணையர் ( தெற்கு ) , திருச்சி ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தூர்செல்வன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் இளமுருகன் மற்றும் கிளப்பின் தலைமை அதிகாரி சந்திரமோகன் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள் .

 இந்த தென்மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தமிழகம் , புதுச்சேரி , கேரளா , தெலுங்கானா , ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மாநில அளவில் வெற்றி பெற்ற சுமார் 800 நபர்கள் பங்கேற்கிறார்கள் . இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 24.09.2022 – ந்தேதி பரிசுகள் வழங்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்