திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் வருவாய்த் துறை சார்பில் 2025 – 26ஆம் ஆண்டுக்கான (1435ஆம் பசலி) ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் குடிகள் மாநாடு நடைபெற்றது. லால்குடி வருவாய் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மற்றும் தலைமையிடத்து மண்டலத் துணை வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. லால்குடி வருவாய்க் கோட்டாட்சியர் ஸ்ரீதர் தலைமை வகித்து, தகுதியான பயனாளிகளுக்குச் சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த ஜமாபந்தியில் புள்ளம்பாடி, பெருவளப்பூர், கல்லக்குடி, வாளாடி, கீழன்பில், லால்குடி ஆகிய பிர்காக்களிலிருந்து பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், தனி பட்டா மற்றும் வீட்டுமனைப் பட்டா, வாரிசுச் சான்று, விதவைச் சான்று, புதிய ரேஷன் கார்டு, சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 565 மனுக்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட மனுக்களில் 207 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டு, அதற்கான ஆணைகள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன. மீதமுள்ள 358 மனுக்கள் உரிய விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
