இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி புனித ஜோசப் தன்னாட்சி கல்லூரியில் மூவர்ண தேசிய கொடியை புனித ஜோசப் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், பொருளியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் இருதயராஜ் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கல்லூரியின் இசைக்குழு தேசிய கீதம் பாடலை பாட கல்லூரியின் என்சிசி மாணவர்கள் மற்றும் என் எஸ் எஸ் தன்னாளர்கள் அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்றனர்

முன்னதாக புனித ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விமானப் படைப் பிரிவு துணை என்சிசி அதிகாரி டேவிட் ராஜா வரவேற்புரை ஆற்றிட எம்.எஸ்.சி, எம்.ஃபில், பி.டி.எஃப், பிஎச்.டி கல்லூரி இயற்பியல் துறை, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் ஜான்சன் சுதந்திர தின உரை ஆற்றினார்.

இறுதியாக கல்லூரி என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். அடையகலராஜ் நன்றி கூறினார் மேலும் புனித ஜோசப் கல்லூரியின் பட்டாலியன் காலாட்படை என்.சி.சி. கேப்டன் டாக்டர் ஆம்ஸ்ட்ராங் அரசு சுதந்திர தின விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்