கர்மவீரர் காமராஜரின் 124 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னையில் மணல் சிற்பத்துடன் ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த ஆண்டு தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியிலும் அதிகாரத்திலும் காங்கிரசுக்கு பங்கு கிடைத்துள்ளது. ஆகையால் காமராஜர் பிறந்த நாளை ஒரு வார காலம் கொண்டாட காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்துள்ளது‌.

இன்று திருச்சியில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸார் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த கோரி மாவட்ட வாரியாக மாநிலம் முழுவதும் 10 லட்சம் போஸ்ட் கார்டை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதாக தீர்மானம் செய்து இன்று அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டோம்.

ஜீலை 21 அன்று டெல்லி ஜலந்தர் மந்திரில் லட்சக்கணக்கான மகளிர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். 33 சதவீத இடஒதுக்கீட்டை சட்டமன்றத்திலும் , பாராளுமன்றத்திலும் உடனடியாக அமல்படுத்தாமல் மத்திய அரசு தொகுதி மறு வரையறையையும், ஜாதிவாரி கணக்கெடுப்பையும் கூறி காலம் தாழ்த்தி வருகிறது. இதனை தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் மாவட்டம் வாரியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 9133400200 என்ற எண்ணிற்கு தொடர்ச்சியாக மிஸ்டு கால் கொடுத்து வருகிறோம். இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு மகளா காங்கிரஸ் மாநில தலைவி திருமதி. ராமலட்சுமி அவர்களை சிறப்பு அழைப்பாளராகவும் தெற்கு மாவட்ட தலைவர் KRR.ராஜலிங்கம் அவர்களின் முன்னிலையில் தெற்கு மாவட்ட மகளா காங்கிரஸ் தலைவி கவிதா நாச்சியார் அவர்களின் தலைமையிலும் மற்றும் மாநிலச் செயலாளர்கள் ஷீலா செலஸ் மற்றும் மோகனாம்பாள் சிறுபான்மை பிரிவு MD. கவுஸ் பாய் மற்றும் தெற்கு மாவட்ட வட்டாரத் தலைவிகள் செயலாளர்கள் மற்றும் 50 மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்