திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டி தொடக்கப்பள்ளியில் உலக ஓசோன் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மக்கள் சக்தி இயக்கம் மாநில ஆலோசகர் நீலமேகம் தலைமை தாங்கிட, சிறப்பு அழைப்பாளர்களாக மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் , கலைக்காவிரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரிரும், தண்ணீர் அமைப்பின் செயலாளருமான சதீஷ்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டு மரக்கன்று நட்டு வைத்தனர்.

மேலும் பூமியில் வாழும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கு நன்மை செய்யும் ஒசோன் படலத்தின் அடர்த்தி குறையாமல் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. என உணர்த்தும் வகையில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் , மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் கொடுத்தும்,

“பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பை எடுப்போம்”உறுதிமொழி ஏற்றனர். அனைவருக்கும் துணிப்பை கொடுக்கப்பட்டது.

ஓசோன் தின ஓவியப் போட்டியில் பங்கேற்றவருக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியப் பயிற்றுநர் லட்சுமி, தலைமை ஆசிரியர் ஜெயந்தி, துணை த. ஆசிரியர் புஷ்பலதா, மகாலட்சுமி ராஜஷீலா, புவனேஸ்வரி, விஜயா, சுரேஷ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *