மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிரவன் தொகுதி முழுவதும் உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

 நாளை மறுநாள் 23ஆம் தேதி தமிழக முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது முன்னதாக இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைவதை முன்னிட்டு மண்ணச்சநல்லூர் தொகுதி முழுவதும் பிரச்சார வாகனத்தின் மூலம் சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளான திமுக, காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனுக்கு உதயசூரியன் சின்னத்தில் பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *