திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அதிமுக வேட்பாளருமான ப.குமார் திருவெறும்பூர் தொகுதி முழுவதும் உள்ள வாக்காள பெருமக்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரமாக திருவெறும்பூர் தொகுதி முழுவதும் தேர்தல் பிரச்சார வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்தில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *