இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது,இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்,இதில் பேசிய அவர் :

9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பங்கு பெறுவது குறித்து விவோதித்தோம். நாடாளுமன்ற கூட்டம் 11ம் தேதியே முடிந்து விட்டது என கூறி விட்டனர் – மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு நம் நாடாளுமன்றத்தில் அனுமதி அளிப்பதில்லை.

9 மாதமாக விவசாயிகள் போராடி வருகின்றனர் – மின்சார திருத்த சட்டம் நிறைவேறி உள்ளது,இதை எல்லாம் எதிர்த்து கேட்க முடியவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் போன்ற பலரின் தொலைபேசியை ஒட்டு கேட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை 5000 இடங்களில் மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்* முதல் நிகழ்வாக தேசிய கொடி ஏற்றுவோம் – பின்னர் எப்படி நாடாளுமன்றம் நடைபெறுமோ அதே போல் நடத்த உள்ளோம்,பின்னர் தீர்மானம் இயற்றி அதை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க உள்ளோம்.

கடுமையான நிதி நெருக்கடியில் கூட தமிழக அரசு 4000 வழங்கியது – பெண்களுக்கு இலவச பயணம் என மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். நேற்று பெட்ரோல் விலை குறைவு குறித்த அறிவிப்பு வெளியானது – இது இறுச்சக்கர வாகனத்தை வைத்துள்ளோர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் ஏற்படுத்தி உள்ளது.

நிதி நிலை அறிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம்.வேளாண் துறைக்கு தனி நிதி அறிக்கை என்பது வரலாற்று சிறப்புமிக்க செயல். கூட்டுறவு சங்கங்கள் பால் போய் விட்டது – ஆனால் இன்று அதை பலப்படுத்தப்படும் என்று கூறி உள்ளனர்.

50% பேர் தான் எங்கும் கலந்து கொள்கிறார்கள் – கிராம சபை கூட்டம் என்பது நடத்துவது சாத்தியம் அல்ல.நெல் கொள்முதல் நிலையங்கள் பல இடங்களில் நிரந்திர கட்டிடம் உள்ளது – ஆனால் ஒரு சில இடங்களில் திறந்தவெளி கொள்முதல் நிலையமாக உள்ளது. எனவே எல்லா இடங்களிலும் கண்டிப்பாக நிரந்திர நெல் கொள் முதல் கட்டிடமாக மாற்ற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *