தமிழக அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார் :

திருச்சியில் 20.93 லட்சம் நபர்கள் தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள தகுதியானவர்கள். இதில் மாவட்டத்தில் இதுவரை 7.50 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கி உள்ளோம்.

கோவிட் மூன்றாவது அலைக்கு முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் உள்ளோம் – குழந்தைகளுக்கு என்று 100 படுக்கைகள் கொண்ட பிரிவு தயார் படுத்தி உள்ளோம். திருச்சி நகரில் உள்ள 20 வார்டுகளில் 103 கி.மீ குடிநீர் விநியோகம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு பஞ்சப்பூரில் 115 ஏக்கர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை முன்மொழிந்துள்ளோம் – நேற்று சட்ட பேரவையில் அறிவித்துள்ளனர்,இனி முறைபடி அதற்கான பணிகள் நடைபெறும். திருச்சியில் 50ல் இருந்து 70 என்கிற அளவில் கடந்த 2 வாரங்களாக கோவிட் பாசிட்டிவ் கேஸ் உள்ளது.

திருச்சியில் 7.50 லட்சம் பேர் முதல் தடுப்பூசிகளை போட்டுள்ளனர் – ஆனால் இரண்டாவது தவனை தடுப்பூசிகளை வெறும் 1.5 லட்சம் பேர் மட்டுமே போட்டு உள்ளனர் – முதல் ஊசி செலுத்தி கொண்டவர்களில் ஏறத்தாழ வெறும் 72% பேர் இரண்டாவது தவனை ஊசியை செலுத்தி கொள்ளவில்லை

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு மிக மிக குறைவாக உள்ளது – தடுப்பூசி முகாம்கள் தொடரந்து காலியாக தான் உள்ளது,மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் – அதேபோல் முக கவசங்களை மக்கள் அணிவதை முற்றிலும் மறந்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *