திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்த உள்ள நிலையில் அதில் மல்லியம்பத்து ஊராட்சியை சேர்க்க வேண்டாம் எனக் கூறி மல்லியம்பத்து கிராம பொதுமக்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க இன்று வந்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: தற்போது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியை விரிவுபடுத்த உள்ளதாகவும் அதில் அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து ஊராட்சியும் சேர்க்கப்பட்டுவதாக தினசரி நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது . இதில் மல்லியம்பத்து ஊராட்சியில் நடப்பு பசலி கணக்கு படி 413 ஏக்கர் நன்செய் நிலமும் , 45 ஏக்கர் புன்செய் நிலமும் உள்ள விவசாய நிலங்கள் சூழ்ந்த பகுதி . இங்குள்ள மக்கள் அனைவரும் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகிறோம் . மேலும் விவசாய நிலம் இல்லாதவர்கள் கூட விவசாயிகளின் நிலத்தில் கூலி வேலை செய்து தான் பிழைப்பு நடத்தி வருகிறோம்
அது மட்டுமில்லாமல் தற்போது ஊராட்சியால் வழங்கப்படும் ( 1067 பயனாளிகள் ) நூறு நாள் வேலை திட்டத்தினை நம்பி தான் பெரும்பாலான குடும்பங்கள் குறிப்பாக மகளிர் , மகளிரை தலைவராக கொண்ட குடும்பங்களின் வாழ்வதாரமே இருக்கின்றது . தற்போது நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியின்படி மல்லியம்பத்து ஊராட்சியை மாநகராட்சியின் கீழ் சேர்பதினால் இங்குள்ள விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வீட்டு மனைகளாகவும் , அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறி முற்றிலும் விவசாயம் அழிந்து விடும் . இதனால் அதனை நம்பியுள்ள விவசாயிகள் , விவசாய கூலி தொழிலாளிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி விடும்
மேலும் , மாநகராட்சி எல்லையில் சேர்க்கப்பட்டால் ஊராட்சியில் வழங்கப்படும் நூறு நாள் வேலை திட்டம் பறிக்கப்படும் இதனால் அதை நம்பியுள்ள பெரும்பலான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படும் . எனவே , தாங்கள் தயவு கூர்ந்து எங்களது மல்லியம்பத்து ஊராட்சியை மாநகராட்சியுடன் சேர்க்கும் திட்டத்தினை கைவிட்டு கிராம ஊராட்சியாகவே தொடர்ந்து இயங்கிட ஆவண செய்து மல்லியம்பத்து ஊராட்சி விவசாயிகள் , பொது மக்களின் வாழ்வினை காத்து பேருதவி புரிந்திட வேண்டுமாய் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் திருச்சி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்