இயற்கை வளங்களை பாதுகாத்து, பசுமையான எதிர்கால தலைமுறையை உருவாக்கும் நோக்கில் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக்,மற்றும் FONS NGO ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்படுத்தும் “தளிர் தலைமுறை” எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைனமிக் சார்பில் Rtn. Er. Rajmohan P அவர்களின் முன்னெடுப்பில் இத்திட்டத்தின் முதல் கட்டமாக கரூர் மாவட்டம் ரங்கமலை வனப்பகுதியில் 20,000 விதைப் பந்துகள் இயற்கை முறையில் விதைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ரோட்டரி உறுப்பினர்கள், FONS NGO சார்ந்தோர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தங்களது பங்களிப்பாக விதைப் பந்துகளை வனப்பகுதியில் பரப்பினர்.

வனப்பகுதிகளின் பசுமையை அதிகரித்து, இயற்கை வளங்களை பாதுகாத்து, எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவதே “தளிர் தலைமுறை” திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த முன்னெடுப்பிற்கு தேவையான 20,000 விதைப் பந்துகளுக்கான ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கிய ஶ்ரீ வண்ணமயில் சீட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. பாண்டியன் அவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. “ஒரு விதை… ஒரு மரம்… ஒரு தலைமுறை” என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள “தளிர் தலைமுறை” திட்டம், தொடர்ந்து பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் முன்னெடுக்கப்பட உள்ளது.
